Anti Ragging Club

எங்கள் ஸ்ரீ நவா கல்வியியல் கல்லூரியில் ( B.Ed.,CC : 10733) பகடி வதை(RAGGING) தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 12/08/2024 அன்று 2.00pm அளவில் கல்லூரியின் தாளாளர் திரு. S.சண்முகம் M.A., B.Ed., செயலாளர் திரு. C.சக்திவேல் B.E., செயல் இயக்குநர் திரு.R.அசோக்குமார் MBA., ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் K.தீபா அவர்கள் பகடி வதை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

பேராசிரியர்கள் மேற்பார்வையில் பின்வரும் செயல்பாடுகளில் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

video
shape

செயல்பாடு 1: பகடி வதை தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவிகள் பேரணியாக முத்தூர் பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செயல்பாடு 2 : பகடி வதை தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளின் கண்கவர் ஓவியங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

செயல்பாடு 3 : பகடி வதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.